Thursday, May 10, 2007

இன்றைய பொழுது இப்போதே!

காலம் உயிர் போன்றது --
போனால் வராது!

5ந்தில் வளையாததால்
50பதில் வளைந்தனர் --
முதியோர் கல்வி.

பருவம் தவறிய மழையால்
பாழாய்ப் போனது பயிர் ---
பருவத்தே பயிர் செய்!

நேற்று என்பது வரலாறு
நாளை என்பது
நம்பிக்கை!!

இன்று என்பதே வாழ்கை!

இன்று என்பது இப்போதே! நாளையல்ல !!!!!!!!!

விண் நோக்கு

பழநி மலைக்குப்
பால் காவடி எடுத்தான்
போன வருடம்!!

திருப்பதி உண்டியலில்
பத்தாயிரத்தைப்
பத்துமாதப் பாக்கியுடன்
சேர்த்துப் போட்டான் போன மாதம்!!

திருச்செந்தூரில் சஷ்டி விரதம்
இருந்து திரும்பினான் போன வருடம்!!

சமயபுரத்தாளுக்கும் மண்டைக்காட்டு அம்மனுக்கும்
கொடுத்தது போதாது என்று
அன்னை வேளாங்கண்ணிக்கும் அருகில் உள்ள
நாகூர் தர்காவுக்கும் அள்ளிக் கொடுத்தான்!!

அரிசி வாங்குவதற்குப் பண்ம் இல்லை என்று
5 ரூபாய் கடனாகப் கேட்ட
அடுத்த வீட்டுக்காரனிடம் சொன்னான் -----
இல்லவே இல்லை என்று!!!!!!