உன் துரோகத்தால்
தொலைந்து போனது
நிம்மதி மட்டும் அல்ல...
நிஜமான என் நேசமும் தான்.....
உன் நயவஞ்சகத்தால்
நசுங்கிப் போனது
நட்பு மட்டுமல்ல......
நாளையைப் பற்றிய நம்பிக்கையும் தான்.....
உன் கபட பார்வையில்
கருகிப் போனது
கனவுகள் மட்டுமல்ல.....
எல்லாரும் நல்லவர்கள்
என்ற எண்ணமும் தான்.....
இப்போது ஏமாற்றிய நீயோ
ஏக சந்தோஷத்தில்....
ஏமாளியான நானோ
இடி வேதனையில்.....
என்னுடைய
இந்த சோகமும்.....
உன்னுடைய ஏமாற்றும் வித்தையும்
என்றும் நிரந்தரமில்லை....
எப்போதும் வஞ்சகங்கள்
வாழ்ந்து விடுவதுமில்லை.....
காலங்கள் மாறுகிற போது.....
மனக் காயங்கள் ஆறுகிற போது....
மீண்டும் நான்
புதிதாய் பிறப்பேன்
இன்னொறு முறை
ஏமாறாமல் இருப்பதற்கு!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment