Tuesday, April 10, 2007

வேகம்

அலையின் வேகம்
கரை அறியும்!

காற்றின் வேகம்
கிளை அறியும்!

பூவின் வேகம்
வண்டு அறியும்!

புவியின் வேகம்
விஞ்ஞானம் அறியும்!

நிலவின் வேகம்
விண் அறியும்!

என்னவளின் வேகம்
நான் அறிந்திருந்தால்
என் இதயத் துடிப்பு
முடிவே இல்லாமல் தொடர்ந்திருக்கும்................

0 comments: